Tuesday, June 5, 2007

kathaikathaiyaam kaaranamaam

சின்னசிறு வயசில் தங்கச்சாமி அய்யா(அப்பாக்கு அப்பா) எனக்கு எலியும் தவளையும் நட்பாயிருந்த கதை சொன்னது இன்னைக்குச் சொன்ன மாதிரி இருக்கு.அன்னைக்குப் பிடிச்சது கதைப்பித்து.அப்புறம் கூரிய
கத்திபோன்ற வார்த்தைகளின் பிடியில் சிக்கியபோது கவிதை.
எண்ணற்ற காமிக்ஸ் கதைப் புத்தகங்கள் (ஓசியில் கிடைத்தவை) என் பால்ய வாழ்வை கற்பனைச் சிறகடிக்க வைக்க, சின்ன உருவமும் வார்த்தையில் தெளிவும் திடமும் கொண்ட கவிதையின் ஈர்ப்பு எனக்குள் சொல்லி மாளாததாய் இருந்தது. விளைவு: சில நல்ல கவிதைளும், ஏகப்பட்ட
குப்பைக் கவிதைகளும் இப்போதும் என் டயரியில்.

No comments: